அனுாப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில், அமலாபால் நடிக்கும் திரைப்படம் ‛கடாவர்'. இத்திரைப்படத்தை அமலாபால் தயாரிக்கவுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று அமலாபாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் அமலாபால், ஒரு வாரம் மருத்துவமனைக்குச் சென்று துறை சார்ந்த மருத்துவர்களிடமும் பயிற்சி பெற்று இந்த கதாபாத்திரத்துக்காகத் தயாராகியுள்ளார். அதுல்யாரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛அசல் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராகவே அமலாபால் மாறிவிட்டார்' என இத்திரைப்படத்தின் இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் கூறியுள்ளார்.