மீண்டும் இணையும் ‘டெடி’ கூட்டணி

By காமதேனு

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'டெடி' படம் 2கடந்த மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது மீண்டு இக்கூட்டணி இணையவுள்ளது. தன்னுடைய அடுத்த படமாக 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தை ஆர்யா ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.

ஆர்யா - ஐஸ்வர்ய லட்சுமி

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் கூறுகையில், ‛‛இப்படம் எல்லா ரசிகர்களையும், ஈர்க்கும்படி இருக்கும். தமிழுக்கு முற்றிலும் புதுமையான கதையாக இப்படம் இருக்கும். இத்திரைப்படம் ஆர்யாவுக்குச் சிறப்பான படமாக இருக்கும். இதுவரை அவர் நடித்திராத பாத்திரத்தில் நடிக்கிறார்,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE