“திரைவானின் சூரியன் ரஜினி”: தமிழக முதல்வர் வாழ்த்து - தேசிய விருது வழங்கும் விழா

By காமதேனு

டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைப்பெற்றுவருகின்றது. துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு மேலும் பலர் தமிழ் திரைத்துறை சார்பாகக் கலந்து கொண்டுள்ளனர்.

விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த், தனுஷ் - ஐஸ்வர்யா தனுஷ்

இந்தியத் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, இவ்வாண்டு ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டரில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE