100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி: தமிழகத் தயாரிப்பாளர் சங்கம்

By காமதேனு

தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து திரையரங்கங்களிலும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் என்.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு, திரையரங்கங்களில் 100 சதவீத இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இருகரம் குவித்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE