தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க, சர்வதேச டிவி ஷோவான 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி, ஒரே சமயத்தில் ஒளிபரப்பை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களுக்குப் பிறகு, நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னா அந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தமன்னா, ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பள பாக்கி உள்ளதாலும், தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்முறையற்ற ஒழுக்கம் காரணமாகவும் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் அளவிற்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார். ஒரே இரவிலேயே அவருடனான தொடர்புகளை அவர்கள் துண்டித்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தெலுங்கு திரைப்பட உலகில் இவ்விஷயம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது