பிட்லீ

By காமதேனு

காமெடி பேய்ப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பேய்ப் படங்கள் என்றால் உடனே ஓகே சொல்லிவிடுகிறார் சாக்‌ஷி அகர்வால். ‘அரண்மனை 3’, ‘சிண்ட்ரெல்லா’ படங்களைத் தொடர்ந்து இன்னும் சில பேய்ப் படங்களிலும் நடிக்கவிருக்கிறாராம் சாக்‌ஷி.

பயம் காட்டும் பேயா... கவர்ச்சி காட்டும் பேயா?!

திரைப்படங்களில் நடித்தாலும் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்துகிறார் ப்ரியா பவானி சங்கர். சமீபத்தில் சில வெப் சீரீஸ் கதைகளைக் கேட்டுள்ள அவர், தனது தேர்வு குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என்கிறார்.

சீரியல் நாயகியா வந்தா மவுசு எகிறுமே?

விவாகரத்துக்குப் பிறகாான மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம், உடற்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார் சமந்தா. அதேபோல பழைய நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, சுற்றுலா செல்வது என்றும் நேரத்தைக் கழிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.


தனியா இருந்தாலும் தன் இஷ்டம் போல இருக்கப் போறாங்க...

ஏதேனும் பிரபலமான ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை, பல நடிகைகளுக்கு இருக்கிறது என்பதை பூஜா ஹெக்டேவும் நிரூபித்துள்ளார். எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை சென்ற, ராஜஸ்தான் மக்களால் ’ராஜமாதா’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரின் 3_வது காயத்ரி தேவியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

இளவரசிக்கு ராஜமாதா வேடமா?!

‘ராட்சசன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம்குமார், தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து படங்களில் தனுஷ் பிஸியாக இருப்பதால், அவருக்காகக் காத்திருப்பதை கைவிட்டு சிவகார்த்திகேயனுக்காக ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் ராம்குமார்.

மறுபடியும் த்ரில்லரா சார்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE