கிராமி விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பரிந்துரை

By காமதேனு

உலக அளவில் இசைக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கிய விருதாகக் கருதப்படுவது கிராமி விருது. இந்த ஆண்டுக்கான 64-வது கிராமி விருதுக்குப் பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பரிந்துரை பட்டியலில், ஹிந்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் க்ரீத்தி சனோன், பங்கஜ் திரிபாதி நடிப்பில் வெளியான ‘மிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற சவுண்ட் டிராக் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ரஹ்மான்.

ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ திரைப்படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ரஹ்மான், அதே ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ திரைப்படத்துக்காக 2 கிராமி விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை ரஹ்மான் கிராமி விருதை வெல்வாரா என்று எதிர்பார்ப்பில் இந்தியாவே காத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE