வாகா எல்லையில் அஜித்

By காமதேனு

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, வடமாநிலங்களில் தனது பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் நடிகர் அஜித். சமீபத்தில், தாஜ்மஹால் சென்றிருந்தார். தாஜ்மஹால் முன்பு அவர் எடுத்த போட்டோக்கள் வைரல் ஆகின.

இந்நிலையில், உலகின் பல நாடுகளை பைக்கில் சுற்றிவந்து சாதனைப்படைத்த மரல் யாசர்லூ என்ற பெண்மணியை டெல்லியில் சந்தித்து, பைக்கில் உலகச் சுற்றுலா போவது பற்றி ஆலோசனை கேட்டார் அஜித். தொடர்ந்து அஜித், வடமாநிலங்களில் பல இடங்களுக்குச் சென்றுவருகிறார். அங்கே, அவர் எடுக்கும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லைக்குச் சென்றுள்ளார் அஜித். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். ராணுவ வீரர்களும் அஜித் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதோடு, வாகா எல்லையில் தேசியக் கொடியை ஏந்தி அஜித் போஸ் கொடுத்த போட்டோக்கள் உள்ளிட்ட பல போட்டோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி, டிரெண்ட் ஆயின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE