நடிகர் ராமராஜன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது ராமராஜனின் மக்கள் தொடர்பாளரான விஜயமுரளி, ‘இத்தகவல் பொய்யானது, ராமராஜன் நலமுடன் இருக்கிறார்’ என்று அறிவித்துள்ளார். திரையுலகிலிருந்து விலகியிருக்கும் ராமராஜன், ஏற்கெனவே சிலமுறை இதே போன்ற வதந்திகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக கவுண்டமணி, செந்தில், மோகன் போன்ற நடிகர்களைப் பற்றி இதுபோன்ற வதந்திகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது சில விஷமிகளின் வாடிக்கையாகிவிட்டது. ‘க்ளிக் பெயிடு’-க்காக இதுபோன்ற புரளிகளைப் பரப்பிவிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.