புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் ஆகியோர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘விக்ரம் வேதா’.
இத்திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பற்றிய பேச்சுகள் கடந்த சில வருடங்களாகவே வந்து கொண்டிருந்தன. கரோனா கட்டுப்பாடுகள், ஒப்பந்தங்களில் இழுபறி என்று பல காரணங்களால் இத்திரைப்படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது அனைத்தும் சுமுகமாகி ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது.
தமிழ்மொழியில் இயக்கிய புஷ்கர்-காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகிறார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், ஷ்ரத்தா கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே, கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவ் ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.