சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று விஜயதசமியை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸர் கலவையான விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. டீஸரை பார்க்கும்போது சிவாவின் முந்தைய படங்களான ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ போன்றே கதையமைப்பு இருக்கக்கூடும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்கள் உண்மையா என்பது ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானால்தான் தெரியும்.