சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தர்மதுரை’. எளிய மனிதன் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களை, மிக யதார்த்தமாகக் காட்சிப்படுத்திய இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. சிறந்த பாடல் வரிகளுக்காகத் தேசிய விருதையும் இத்திரைப்படம் பெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளது.
2-ம் பாகத்துக்கான கதை உருவாக்கும் வேலையை, இயக்குநர் சீனு ராமசாமி ஆரம்பித்துவிட்டார் என்று இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். 2-ம் பாகத்திலும் விஜய் சேதுபதியே நடிப்பாரா அல்லது வேறு நடிகர் நடிப்பாரா என்பதும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.