அடுத்த ஆண்டு திருமணம்: ரகுல் ப்ரீத் சிங்

By காமதேனு

‘இந்தியன்-2’, ‘அயலான்’ போன்ற தமிழ்த் திரைப்படங்களில் தற்போது நடித்துவரும் ரகுல் பிரீத் சிங், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தனது பிறந்தநாளான கடந்த அக்டோபர் 10-ம் தேதி ஹிந்தி படத் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை தான் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார் ரகுல். அதேபோல் ஜாக்கியும் ரகுல் மீதான தனது காதலை உறுதிப்படுத்தி ராகுலுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே சில ஆண்டுகளாக தங்கள் காதலை மறைத்து வைத்திருந்து தங்களது உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இப்போது வெளிப்படையாக அறிவித்துள்ளனர். திருமணத்துக்கு முன்பு தனது கைவசமுள்ள பல திரைப்படங்களை நடித்து முடிக்க முடிவெடுத்துள்ளார் ரகுல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE