‘ஜீவி’ 2-ம் பாகம்

By காமதேனு

2019-ம் ஆண்டு வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்ற சில திரைப்படங்களில், நடிகர் வெற்றி தயாரித்து நடித்த ‘ஜீவி’ திரைப்படத்துக்கும் இடமுண்டு. வி.ஜே.கோபிநாத் இயக்கிய இத்திரைப்படத்தில், மோனிகா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் 2-ம் பாகம், தற்போது தயாராகவுள்ளது. இதையும் வி.ஜே.கோபிநாத்தே இயக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சி தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்கிறார். இதிலும் வெற்றியே கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ‘ஜீவி’ பாகம் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட அதே முக்கோண விதியை பின்னணியாகக் கொண்டு, மேலும் அழுத்தமான வகையில் இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE