மகனின் 3-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்பா

By காமதேனு டீம்

தென்னிந்திய சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், தொடங்கி விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இலங்கைத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ரம்பா அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார். மிச்ச நேரங்களில் எல்லாம் தன் பிள்ளைகளுடன் செலவிடுவதிலேயே கழிக்கிறார். தற்போது தனது மகனின் 3-வது பிறந்தநாளை ரம்பா குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ரம்பா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE