விஜய்க்கு வில்லனாக நடிக்கும் நானி

By காமதேனு டீம்

நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடந்து முடிக்கவுள்ள நிலையில், அடுத்து விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக இருக்கும் இவரின் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'விஜய்-66' தயாராகவுள்ளது. இத்திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், 'விஜய் 66' திரைப்படத்தில் வில்லனாக ‘நான் ஈ’ திரைப்படத்தில் நடித்த நானி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE