மாரி செல்வராஜுடன் கபடி பயிற்சி: அடுத்த படத்துக்குத் தயாராகும் துருவ்

By காமதேனு டீம்

'ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான துருவ் விக்ரம், தற்போது அவரது தந்தையான விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மகான்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் துருவ் விக்ரம்.

மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் திரைப்படம் கபடியை மையமாகக் கொண்டது என்பதால், அதற்காகத் தீவிரமான கபடி பயிற்சியில் துருவ் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த தொழில்முறை கபடி வீரர்களை அழைத்துவந்து, தனது மகன் தீவிரமாகப் பயிற்சி எடுக்க வசதிகள் செய்து கொடுத்திருந்தார் விக்ரம்.

தற்போது, துருவ் கபடி பயிற்சி எடுப்பதை இயக்குநர் மாரி செல்வராஜ் பார்வையிட்டார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE