காரின் பதிவு எண்ணுக்கு ரூ.17 லட்சம்: ஜூனியர் என்டிஆரின் நியூமராலஜி நம்பிக்கை

By காமதேனு டீம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், சமீபத்தில் ‘லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல்’ என்ற காரை வாங்கினார். சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த வகை காரை, இந்தியாவில் முதன்முதலில் வாங்கியவர் இவர்தான்.

நியூமராலஜியில் அதீத நம்பிக்கைக் கொண்ட ஜூனியர் என்டிஆர் வைத்துள்ள அனைத்து கார்களிலும் 9999 என்ற பதிவு எண்தான் இருக்கும். தற்போது, தன்னுடைய புதிய லம்போர்கினி காருக்கு TS 09 FS 9999 என்ற ஃபேன்ஸி பதிவு எண்ணை ரூ.17 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்தியத் தயாரிப்பில் ரூ.17 லட்சத்துக்கு ஒரு காரே வாங்கக்கூடிய நிலையில், காரின் பதிவு எண்ணுக்கு அவ்வளவு தொகையை, ஜூனியர் என்டிஆர் செலவு செய்திருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE