சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா

By காமதேனு டீம்

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் சூரியை வைத்து இயக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்னும் முடிக்கவில்லை. அதனால், அவர் அந்த படத்தை முடித்து விட்டு வருவதற்குள், சிவா இயக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார் சூர்யா.

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், அடுத்த மாதத்திலேயே சூர்யா - சிவா கூட்டணியில் பட வேலைகள் ஆரம்பிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள இத்திரைப்பட படப்பிடிப்புக்கு தற்போது செட் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE