சைமா விருதுகளைக் குவித்த ‘சூரரைப்போற்று’

By காமதேனு டீம்

தென்னிந்திய சினிமாக்கள் என்று கருதப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, மொழி திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதான ‘தென்னிந்தியச் சர்வதேச திரைப்பட விருது விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. 2020-ம் ஆண்டிற்கான சைமா விருது விழாவில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த

‘சூரரைப்போற்று’ திரைப்படம் 7 விருதுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இதுபோக பல தமிழ்த் திரைப்படங்களும் விருதுகளைப் பெற்றுள்ளது.

சைமா விருது பட்டியல்

சிறந்த படம்: சூரரைப்போற்று

சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (சூரரைப்போற்று)

சிறந்த நடிகர் : சூர்யா (சூரரைப்போற்று)

சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ் (க.பெ.ரணசிங்கம்)

சிறந்த நடிகர்: (ஜூரி அவார்ட்) அசோக் செல்வன் (ஓ மை கடவுளே),

சிறந்த நடிகை: (ஜூரி அவார்ட்) அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)

சிறந்த துணை நடிகை: ராதிகா சரத்குமார் (வானம் கொட்டட்டும்)

சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் (சூரரைப்போற்று)

சிறந்த பாடலாசிரியர் பா.விஜய் (பார்த்தேனே... மூக்குத்தி அம்மன்)

சிறந்த பாடகர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் (வேயோன் சில்லி... சூரரைப்போற்று)

சிறந்த பாடகி: பிருந்தா சிவகுமார் ( வா செல்லம்... பொன்மகள் வந்தாள்)

சிறந்த வில்லன்: மைம்கோபி (காவல்துறை உங்கள் நண்பன்)

சிறந்த அறிமுக நடிகர்: ஸ்ரீராம் கார்த்திக் (கன்னி மாடம்)

சிறந்த அறிமுக நடிகை: ரிது வர்மா (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)

சிறந்த அறிமுக இயக்குநர்: ஆர்ஜே.பாலாஜி, சரவணன் (மூக்குத்தி அம்மன்)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர்: ஒயிட் மூன் டாக்கீஸ் (காவல்துறை உங்கள் நண்பன்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: நிகித் பொம்மிரெட்டி (சூரரைப்போற்று)

சிறந்த நகைச்சுவை நடிகர்: விவேக் (பல படங்கள்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE