பிட்லீ 26.09.2021

By காமதேனு

ஜீ தமிழின் ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ளும் பிரபலங்களில் ஒருவரான விஜே பார்வதி, சக போட்டியாளர்களுடன் சதா சண்டை பிடிக்கிறாராம். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி போல, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் விஜே பார்வதி என்று பட்டப்பெயர் வைத்துவிட்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

மதுரைக்காரின்னா சும்மாவா?

விஜே பார்வதி

விஜே பார்வதி

விஜே பார்வதி

விஜே பார்வதி

விஜே பார்வதி

நடிப்பதிலிருந்து சில நாட்கள் ஓய்விலிருக்கும் காஜல் அகர்வால், கர்ப்பமாக உள்ளார் என்று செய்தி பரவியிருக்கிறது. ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். காஜல் அகர்வாலோ அவரது கணவர் கௌதம் கிட்சுலுவோ இதுவரை இதுகுறித்து மறுப்போ, ஆமோதிப்போ தெரிவிக்கவில்லை.

தகவலே அவங்கதானய்யா சொல்லணும்...

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

அமெரிக்காவின் பிரபலமான சிபிஎஸ் தொலைக்காட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட 6 சமூக செயற்பாட்டாளர்களில் யார் சமூக வலைதளத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர் என்று போட்டி வைக்க களமிறங்கியது. போட்டியில், சிறந்தவர்களைப் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 3 பிரபலங்கள் தேர்ந்தெடுப்பதாக பிளான். இந்தத் திட்டத்துடன் எடுக்கப்பட்ட ‘ஆக்டிவிஸ்ட்’ ரியாலிட்டி தொடருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், டாக்குமென்ட்ரி சீரிஸாக மாற்றிவிட்டார்களாம்.

நம்மூர்ல இதை எப்படிப் பார்க்கிறது?

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கியதாகச் சொல்லப்பட்ட சோனு சூட்டுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடந்துள்ளது. சோனு சூட்டுக்குச் சொந்தமான நிறுவனம் மற்றும் லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையேயான வர்த்தகத்தில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரே, இந்த ரெய்டுக்கான காரணமாம்.

நல்லதுக்கே காலமில்லைன்னு சொல்லலாமா?

சோனு சூட்

சோனு சூட்

சோனு சூட்

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்து வருகிறது. பிரகாஷ்ராஜும் தெலுங்கு நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். பிறப்பால் கன்னடரான பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் சங்கத் தலைவராகக் கூடாது என்று ஒருபக்கம் பிரச்சாரம் நடந்தாலும், தான் வெற்றிபெற்றால் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு 10 கோடி ரூபாய் நன்கொடை தருவதாக பிரகாஷ்ராஜ் இன்னொரு புறம் டீலிங் பேசிவருகிறாராம்

ஆ.. ஊ..ன்னா சாதி, மதம், மொழிய இழுத்திடுறாங்கப்பா...

பிரகாஷ்ராஜ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE