நடிப்புக்கு பிரேக்? - முடிவை மாற்றிய சமந்தா!

By காமதேனு டீம்

விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்துவரும் சமந்தா, தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் ‘சகுந்தலம்’ திரைப்படத்துக்குப் பிறகு, நடிப்பதிலிருந்து சிறிய பிரேக் எடுக்கப்போவதாகக் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, சமந்தாவை அடுத்து திரையில் பார்க்க சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. ஸ்ரீதேவி மூவி கிருஷ்ணபிரசாத் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தின் திரைக்கதை சமந்தாவை வெகுவாக ஈர்த்துவிட்டதால், நடிப்பதிலிருந்து பிரேக் எடுக்கலாம் என்ற முடிவைத் தள்ளிவைத்துவிட்டாராம் சமந்தா. சமந்தாவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE