தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்வது, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது என சமூக நோக்குடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வரலட்சுமி சரத்குமார். தற்போது அவருடைய மேக்கப்மேன் ரமேஷ் என்பவருக்கு கார் ஒன்றைப் பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.
தனது சமூக வலைதள பக்கங்களில் “நீங்கள் என்னுடைய ஒப்பனைக் கலைஞர் மட்டுமல்ல, என்னுடைய வலது கரம். நீங்கள் இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது” என்று பதிவிட்டு, அவருக்கான பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.