1990-களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா கிருஷ்ணன், ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர். தற்போது பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’ திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
நேற்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை குஷ்பூ, ஆண்ட்ரியா, திரிஷா, உமா ரியாஸ் கான், நகுல் என்று தன்னுடைய சினிமா நண்பர்களுடன் ஆரவாரமாகக் கொண்டாடியுள்ளார் ரம்யாகிருஷ்ணன். அவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.