மீண்டும் தள்ளிப்போகும் ‘வலிமை’ ரிலீஸ் தேதி

By காமதேனு டீம்

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், 2 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று போகிற பக்கமெல்லாம் படக்குழுவைத் தவிர்த்து மற்ற அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டுவந்தனர் அஜித் ரசிகர்கள். இதைத் தொடர்ந்து வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ‘நாங்க வேறமாறி’ பாடல் வெளியானது.

’வலிமை’

வரும் தீபாவளிக்கு ஸ்பெஷல் ரிலீசாக ‘வலிமை’ திரைப்படம் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளியன்று ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால், வசூல் ரீதியாகப் பாதிப்புகள் வரலாம் எனத் தயாரிப்பாளர் தரப்பில் கருதப்படுவதால், ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீசை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாண்டின் இறுதியில், கிறிஸ்துமஸ் விடுமுறையில் ‘வலிமை’ திரைப்படம் வெளியிடத் திட்டமிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS