எனக்கு அரசியலே வேண்டாம் : வெளியான ‘தலைவி’ படக் காட்சிகள்

By காமதேனு

ஏ.எல். விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தலைவி’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அத்திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி இணையதளத்தில் ஸ்னீக் பீக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அக்காட்சியில், காங்கிரசை வீழ்த்தி அண்ணா ஆட்சிக்கட்டிலில் ஏறுவது போலவும், அதன்பின் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமியும் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்தும் காரில் போய்க் கொண்டிருக்கும் போது, ஜெயலலிதாவை எம்ஜிஆர் அரசியலுக்கு நீயும் வா என்று அழைப்பது போலவும் “ஆளை விடுங்க, எனக்கு இந்த அரசியலே வேண்டாம்” என்று ஜெயலலிதா பேசுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இக்காட்சியில் எம்ஜிஆர், ‘கருணாநிதியைப் போல ஒரு புரட்சியாளனை இந்த மண் பார்த்ததில்லை‘ என்று கூறும் வசனமும் இடம்பெற்றிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE