சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகிறது.
தற்போது வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து, கிராமத்துத் திருவிழா பின்னணியில் கோயில் மணிகள் புடைசூழக் காட்சியளிக்கிறார். இத்திரைப்படம், முழுக்க முழுக்க கிராம பின்னணியைக் கொண்ட குடும்ப கதை என்று படக்குழு சார்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட சில மணி நேரங்களில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிட்டுள்ளது படக்குழு.