நான் நலமாக இருக்கிறேன் : விஜயகாந்த் விளக்கம்

By விக்கி

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அடிக்கடி சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது உயர்தர சிகிச்சை பெற துபாய் சென்றுள்ளார் விஜயகாந்த்.

சக்கர நாற்காலியில் விஜயகாந்த்

துபாய் செல்வதற்காக, சென்னை விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த விஜயகாந்த்தின் படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். தற்போது துபாயில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். தான் நலமாக இருப்பதாக விஜயகாந்த்தே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில், கூலிங்கிளாஸ், டீ-ஷர்ட் அணிந்து செவிலியர்கள் அருகே நிற்க செல்போனில் படம் பார்த்தபடி இருக்கிறார் விஜயகாந்த். செல்போனில் செவிலியர்களுடன் சேர்ந்து, தான் 1990-ம் ஆண்டு நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

‘விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வரணும்..பழைய பன்னீர்செல்வமா வரணும்’ என்று ரசிகர்கள், சத்ரியன் பட வசனத்தை ட்ரெண்டிங் செய்துகொண்டிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE