ரீப்ளேஸ்மென்ட் ரோல் பண்றது அவ்ளோ ஈசியில்ல...  - ‘ரோஜா’ வில்லி அக்‌ஷயா

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

கொங்கு தமிழ் மணக்க ஒவ்வொரு கேள்விக்கும் படபடவென கலகலப்பாய் பதில் சொன்னார் அக்‌ஷயா. வி.ஜேவாக மீடியாவில் தடம்பதித்த அக்‌ஷயா, இப்போது சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் வில்லி அக்‌ஷயாவாக மாறியிருக்கிறார். அவரோடு பேசியதிலிருந்து...

 உங்களைப் பற்றி?

நான் கோவை பொண்ணு. அங்க டிகிரி முடிச்சிட்டு, சென்னை வந்து மாஸ் கம்யூனிகேஷன் கோர்ஸ்ல மாஸ்டர் டிகிரி முடிச்சேன். பிறகு, ட்ரெய்னி புரொடியூசரா சன் டிவியில சேர்ந்தேன். அடுத்து அசிஸ்டென்ட் புரொடியூசர், புரொடியூசர் என வொர்க் பண்ணேன். ஒரு கட்டத்துல அதை ரிசைன் பண்ணிட்டு, அங்கேயே ஆங்கர் ஆகி இப்போ நடிக்கவும் வந்தாச்சு.

 ஆங்கர் டு சீரியல் ஆர்டிஸ்ட் எப்படி சாத்தியம் ஆச்சு?

புரொடியூசரா இருக்கும்போது நிறையப் பேரை ஆடிசன் பண்ணிட்டு இருந்த நான், ஒரு கட்டத்துல நானே ஆடிசன் போயி சன் மியூசிக்ல ஆங்கர் ஆகிட்டேன். தொடக்கத்திலேயே சீரியல்ல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஆனா, ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைக்க வேண்டாம்னு அதை ஏத்துக்காம இருந்தேன். பிறகு சன் டிவியிலும் சில ஷோஸ் பண்ணிட்டு இருக்கும்போது தான், ரோஜா சீரியல்ல வாய்ப்பு வந்துச்சு.

ஆடிசன் கொடுத்திருந்தேன். ஓகே ஆகும்னு எதிர்பார்க்கல. ஆனா கிடைச்சிருச்சு. சரி, கடவுள் விட்ட வழிதான் இதுனு ரோஜா சீரியல்ல நடிக்கவும் வந்துட்டேன். ஆனா, டிவி ஷோக்கள் மூலமா ரோஜா சீரியல் டீம் கூட எனக்கு ஏற்கெனவே நல்ல அறிமுகம் இருந்துச்சி. இப்ப அதுவும் நல்லா கைகுடுக்குது.

ஆங்கரா இருக்கிறப்ப நிறைய பேசி, ஃபன் பண்ண வேண்டியிருக்கும். ஆனா ரோஜா சீரியல்ல, உங்க ரோல் வில்லி தானே. வில்லினா குறைவாத்தான் பேசுவாங்க, முறைச்சிட்டே இருப்பாங்க... எப்படி சமாளிக்கிறீங்க?

ரோஜால நான் பண்ற கேரக்டர் என்னோட ரியல் கேரக்டருக்கு அப்படியே எதிரானது. நான் நானாவே நடிக்கிறது ஈசி. ஆனா, இது புது விஷயங்கிறதால சவாலாவும் இருந்துச்சு. ஏன்னா, ஆக்டிங் கெரியர்ல என்னோட முதல் கேரக்டர்; அதுவும் இல்லாம, மூணு வருசமா இன்னொருத்தர் நடிச்சிட்டு இருந்த கேரக்டர்ல ரீப்ளேஸ்மென்ட். அதை எடுத்து பண்றது அவ்ளோ ஈசியில்ல.
பாஸிட்டிவ் கேரக்டர்ஸை ரீப்ளேஸ் பண்றதை

விட நெகட்டிவ் கேரக்டரை ரீப்ளேஸ் பண்றது சேலஞ்சிங் தான். ஆரம்பத்துல நல்லா முறைக்கச் சொல்வாங்க, நானும் முறைப்பேன். ஆனா, கலகலப்பான என்னோட முகத்துல முறைப்பே நல்ல வராது. தொடர்ந்து நடிச்சி நடிச்சி தான் அந்த கேரக்டருக்கு ஏற்ப என்னை இம்ப்ரூவ் பண்ணி, ஸ்கோர் பண்ணிட்டு இருக்கேன். சீரியலை பொறுத்தவரை மற்ற கேரக்டர்ஸைவிட வில்லி கேரக்டர் தான் ஆடியன்ஸ் மனசுல நல்லா பதியுங்கிறதும் ரொம்பவே உற்சாகத்தைக் கொடுக்குது.

 ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு?

எனக்கு ரீசன்டா தான் கல்யாணம் ஆச்சு. எங்க வீட்டுலயும் சரி, அவரோட வீட்டுலயும் சரி, எனக்கு பயங்கர சப்போர்ட். “உன் இஷ்டம். நீ பண்றது கரெக்ட்னு உனக்குத் தெரிஞ்சா தாராளமா அதை பண்ணு”னு முழு ஒத்துழைப்பு கொடுக்காங்க. இப்போ என்னோட வேலையைப் புரிஞ்சிக்கிட்டு, கொஞ்சம்கூட முகம் சுழிக்காம என்னை கவனமா பார்த்துக்கிறது என் ஹஸ்பண்ட் தான்.

அடுத்த இலக்கு?

இதுவரைக்கும் கிடைச்ச எல்லா வாய்ப்புகளும் தானாக அமைஞ்சது தான். அதை மனநிறைவோட மகிழ்ச்சியா பண்ணிட்டு இருக்கேன். ரோஜா சீரியல் ஷூட், சன் டிவி ஷோ ஷூட்னு நேரம் சரியா இருக்கிறதால, இப்போதைக்கு புதுசா எதிலும் கமிட் ஆகல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE