சினிமா பிட்ஸ்

By காமதேனு

பிட்லீ
readers@kamadenu.in

காஜலின் அன்புத்தங்கை என்ற அடையாளத்துடன் தெலுங்கில் அறிமுகமாகி, பின் 2012-ல் விமல் நடித்த ‘இஷ்டம்’ மூலம் தமிழுக்கு வந்தவர் நிஷா அகர்வால். அடுத்தடுத்து சரியான படங்கள் அமையாததால் 2014-லேயே நடிப்பதை நிறுத்திக்கொண்ட நிஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தெலுங்கில் ராணாவுக்கு ஜோடியாக ஒரு வெப் தொடரில் நடிக்கவுள்ளாராம்.

இதுவும் கைகொடுக்கலைன்னா சீரியலுக்கு வாங்க சித்தி...

தயாரிப்பாளர்கள் சங்கம் தனக்கு ரெட் கார்ட் போட்டிருப்பதால், ஓடிடி தளங்களில் ரீ-என்ட்ரி கொடுக்க திட்டமிட்டுள்ளார் வைகைப் புயல் வடிவேலு. அடுத்தடுத்து பல புது இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் வடிவேலு கைவசம் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களையும் புக் செய்து வைத்துள்ளாராம்.

என் தலைவனுக்காடா என்ட் கார்டு போடப் பாக்குறீங்க..?

கிளாசிக் வெற்றிப்படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக், தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. 1972-ம் ஆண்டு வெளிவந்த பழைய படத்தில், தேங்காய் சீனிவாசன் நடித்த புகழ்பெற்ற அப்பா சுவாமி கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். நவீனக் காலத்துக்கேற்ப திரைக்கதையும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

முத்துராமன் கதாபாத்திரம் யாருக்கு?

மார்வல் காமிக்ஸின் ‘ப்ளாக் விடோ’ திரைப்படத்தின் ப்ரொமோஷன் விழாக்களுக்கு, படத்தின் கதாநாயகியான ஸ்கார்லட் ஜான்சன் வராமல் போனது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மார்வல் நிறுவனத்துக்கும் ஸ்கார்லட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் வதந்திகளும் பரவிய நிலையில், “ஸ்கார்லட் ஜான்சன் கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை” என்று அவரது கணவர் விளக்கமளித்திருக்கிறார்.

‘குட்டிப்பாப்பா ரிலீஸ் டேட்' என்ன?

நடித்தால் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கிறார், அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ஹெலன்’ திரைப்படத்தை ரீமேக் செய்து தன் தந்தையுடன் அவர் நடித்த ‘அன்பிற்கினியாள்’  தோற்றுப்போனாலும் சோர்வடையவில்லை வாரிசு. அடுத்தப் படமான ‘கண்ணகி’ கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.

கேப்டன் பையனோடு ஜோடி சேருவீங்களா பாப்பா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE