ரியல் ஜோடி ரீல் ஜோடியானதுல டூயல் ஹேப்பி!- ‘அபி டெய்லர்' ரேஷ்மா

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

“நாங்க ஜோடியா சேர்ந்து நடிக்கிற முதல் சீரியலுங்குறதால எங்களுக்கே இது புதுவித அனுபவமே” சொல்லும்போதே, ரேஷ்மாவின் முகத்தில் அப்படியொரு அரிதாரப் புன்னகை.

கலர்ஸ் தமிழில், இந்தத் திங்கள் முதல் ஒளிபரப்பாக விருக்கும் ‘அபி டெய்லர்' புதிய தொடரில் நாயகியாக நடிக்கும் ரேஷ்மாவிடம் பேசியதிலிருந்து...

ரியல் ஜோடி டு ரீல் ஜோடி அனுபவம் எப்படி இருக்கு?

நாங்க ஜோடியாக சேர்ந்து நடிக்கிற முதல் சீரியல் இதுங்குறதால எங்களுக்கே புதுசாதான் இருந்துச்சு. எங்களை விட, ரேஷ்மா - மதனை ஜோடியாக ஸ்கிரீன்ல பார்க்க எங்களுடைய ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமா இருக்காங்க. இப்படி ஒரு புராஜக்ட் பண்ணணும்ங்குற எங்களுடைய ஆசை நிறைவேறுனதுல டூயல் ஹேப்பி. ரீல் ஜோடியாக நடிக்கும்போது புரொபஷனலா இருக்கும். இதுவரை எங்களுக்கு காம்பினேஷன் சீன்ஸ் பெருசா எதுவும் எடுக்கலை. அவர்கூட ஜோடியா நடிக்கும்போது ரொம்பவே பர்சனல் கனெக்ட் இருக்கும். அந்த மொமன்ட்டுக்காக ஆர்வத்தோடு காத்திருக்கேன்.

'அபி டெய்லர்' சீரியல் குறித்து..?

இரண்டு வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல். அதுல என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவே ஃபேமஸான ஒரு டெய்லர். சிஎம் கூட தேடி வந்து என்கிட்டதான் துணி தைப்பாங்க. அந்த அளவுக்கு ஃபேமஸான ஒரு கேரக்டர். இதுக்கு முன்னால சோனாம்மா, ரேஷ்மா பசுபுலேட்டி இவங்களையெல்லாம் ஸ்கீரின்லதான் பார்த்திருக்கேன். இப்ப அவங்களோடவே சேர்ந்து வேலை பார்க்குறது மகிழ்ச்சியா இருக்கு. எனக்கு பேசிட்டே இருந்தா ரொம்ப பிடிக்கும். அதுக்கு ஏத்த மாதிரி இவங்க இரண்டு பேருமே ஜாலியா செட்ல கலகலன்னு பேசிட்டு இருப்பாங்க.

உங்களோட காதலை புத்தாண்டு அன்னைக்கு இன்ஸ்டாகிராமில் ஆடியன்ஸுக்கு அறிவிச்சீங்களே ஏன்?

நாங்க சில வருஷமாக காதலிக்கிறோம். பர்சனலா எங்களுடைய காதலை எங்க ரசிகர்களுக்கு அறிவிக்கணும்னு பிளான் பண்ணினோம். நியூயியர் அன்னிக்கு நம்ம காதலை தெரிவிக்கலாம்னு நவம்பர் மாசமே முடிவு பண்ணிட்டோம். எந்த போட்டோவை போஸ்ட் பண்ணலாங்குறதகூட முடிவெடுத்தோம்.

உங்க நண்பர்கள் என்ன சொல்றாங்க?

அப்பப்போ ஏதாச்சும் கிண்டல் பண்ணுவாங்க. இப்போ. “கல்யாணம் ஆகப் போகுது. ரெண்டு பேரும் சேர்ந்தே ஷூட்டிங் போய்ட்டு சேர்ந்தே வீட்டுக்கு வரலாம்”னு கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. திருமணம் ஆனா கூட செட்ல சேர்ந்தேலாம் இருக்க மாட்டோம். அவர் செட்டுக்கு போய்ட்டாலே ரொம்ப புரொபஷனலா இருப்பார். அந்த கதாபாத்திரமாகவே மாறிடுவார். நான் அப்படியில்லை. ரெடி டேக்னு சொன்னாதான் கேரக்டரா மாறி நடிப்பேன். அதனால இயல்பை மாத்திக்க மாட்டோம்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம்!

உங்களுடைய தற்போதைய ஆசை?

தினமும் ஷூட் போய்ட்டு இருக்கு. அதனால இரண்டு நாள் லீவு விட்டா நல்லா சாப்பிட்டுத் தூங்கணும். அதுதான் இப்போதைக்கு ஆசை.

திருமண பிளான்..?

கரோனா லாக்டவுனுக்கு முன்னாடியே திருமண தேதியை முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, லாக்டவுன் போட்டதால தேதியை மாற்றினோம். அடுத்து எப்போன்னு இன்னும் முடிவு பண்ணலை. எப்படியும் கூடிய சீக்கிரம் திருமணம் முடிஞ்சுரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE