பகத்பாரதி
readers@kamadenu.in
“இப்போதைக்கு நடிக்க வேண்டாம்னு ஊருக்குத் திரும்பிப் போன எனக்குக் கிடைச்ச புது வாய்ப்புதான் சீரியல்” விழிகள் விரியப் பேசத் தொடங்கினார் நவ்யா சுஜி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி 2'-வில் நடித்துக் கொண்டிருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து கொஞ்சம்...
உங்களைப் பற்றி..?
ஆந்திரா தான் எனக்கு சொந்த மாநிலம். வேலைக்குப் போகணும்கிற உந்துதல்ல பிடெக் படிச்சேன். ஐடி வேலை கிடைச்சதால நானும் அக்காவும் சென்னைக்கு வந்தோம். இரண்டரை வருடங்கள் ஐடி கம்பெனியில் வேலை பார்த்தேன்.