எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
ரொமான்ஸ் கலந்த த்ரில்லரான ‘ஹசீன் தில்ரூபா’ இந்தித் திரைப்படம் கடந்த வாரம் வெளியானதிலிருந்து, நெட்ஃப்ளிக்ஸின் இந்திய டாப் 10 படைப்புகளில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
திட்டமிட்டுக் கணவனைக் கொலை செய்ததாக மனைவியைக் கைது செய்கிறது போலீஸ். உறவுகளும் ஊராரும் அவள் மீதே பழி சுமத்துகின்றனர். ஆனால், குற்றத்தை உறுதி செய்யும் தடயம் எதையும் போலீஸால் கண்டறிய முடியாததோடு, கொலையைச் செய்யவே இல்லை எனச் சாதிக்கும் மனைவியை மேற்கொண்டு விசாரிக்க முடியாது தேங்குகிறார்கள். நான்லீனியர் திரைக்கதையில் ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் விரைகிறது ‘ஹசீன் தில்ரூபா’. தமிழ் டப்பிங்கிலும் ரசிக்க நெட்ஃப்ளிக்ஸ் வழி செய்திருக்கிறது. டாப்ஸி பன்னு, ஹர்ஷவர்தன் ரானே உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் இப்படத்தை வினில் மேத்யூ இயக்கி உள்ளார்.
உறவுச் சிக்கல்