பகத்பாரதி
readers@kamadenu.in
“இப்ப தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கேன். அடுத்து என்ன படிக்கலாம்னு இனிமேட்டு தான் முடிவு பண்ணணும்” என்று, இன்னமும் அக்மார்க் பள்ளி மாணவி போல் அழகாய்ப் பேசுகிறார் ரவீணா தாஹா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மெளனராகம் சீசன் 2'வில் நாயகியாக நடிக்கும் அவரைப் பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோமா?
உங்களைப் பற்றி..?
எனக்கு இப்ப 17 வயது. எங்களுடையது கூட்டுக் குடும்பம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், மாமான்னு எங்க வீடு எப்பவுமே ஜாலியா இருக்கும். இதைத் தவிர என்னைப் பற்றி ஸ்பெஷலா சொல்ல எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.