பிரபாகரன் வேடத்தில் நடிக்க பயந்தேன்!- ‘மேதகு' நாயகன் குட்டிமணி பேட்டி

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

சிவகங்கையைச் சேர்ந்த 24 வயது இளைஞரான குட்டிமணியை, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது ‘மேதகு' திரைப்படம். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றின் முதல் பாகமாக ஓடிடியில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் நாயகனாக நடித்ததன் மூலம், புகழ்வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் குட்டிமணி. ஏற்கெனவே சிவகங்கையின் நிஜ கதாநாயகனாக அறியப்பட்டிருக்கும் இந்த இளைஞர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை முதிர்ச்சி, நிதானம். நடிகர் குட்டிமணியுடனான உரையாடலிலிருந்து...

முதல் படத்திலேயே மிக முக்கியமான வேடம். எப்படிக் கிடைத்தது இந்த வாய்ப்பு?

முதல் காரணம், என்னோட நண்பரும், குறும்பட இயக்குனருமான பாரதி. என்னை வெச்சி ஏற்கெனவே ‘நரகல்', ‘பயமில்லா ஒரு நாள்'னு 2 குறும்படம் இயக்கிய அவருதான், சினிமான்னா என்ன, எப்படி நடிக்கணும்னு முழுசாச் சொல்லிக் குடுத்தவரு. அவரும் சிவகங்கைதான். ஒரு நாள், “மேதகுன்னு ஒரு படத்துக்கு ஆடிஷன் நடக்குது தம்பி"ன்னு தகவல் கொடுத்தாரு. அப்புறம்தான் தெரிஞ்சுது இது நம்ம ‘தலைவர்' படம்னு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE