பிட்லீ
readers@kamadenu.in
ரெஜினாவும், நிவேதா தாமசும் ‘மிட்நைட் ரைடர்ஸ்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ தெலுங்கு ரிமேக்கில் நடித்து வருவது தெரிந்ததே. ‘மிட்நைட் ரைடர்ஸ்’ திரைப்படத்துக்கு சண்டைப் பயிற்சி கொடுத்த மாஸ்டரையே வரவழைத்து, இப்போது இவர்களும் பயிற்சி எடுக்கிறார்கள். ஒரு மாத பயிற்சிக்குப் பிறகு இவர்கள் மோதிக்கொள்ளும் காட்சியைப் படமாக்கப் போகிறார்களாம்.
யூனிட் ஆளுங்க ஜாக்கிரதையா இருங்கப்பா...
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் எடுத்த ‘பாகுபலி -பிஃபோர் தி பிகினிங்’ தொடர் எதிர்பார்த்தபடி வராததால், மறுபடியும் முதலில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாகூர், மறுபடி எல்லாம் நடிக்க முடியாது என்று கழன்றுவிட்டார். அவருக்குப் பதிலாக சமந்தாவை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. சமந்தாவும் மறுத்துவிட்டாராம்.