ஓ.டி.டி. உலா: தனுஷ் ரசிகர்களுக்கான ‘ரகிட... ரகிட...’

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

மதுரைப் பக்கம் கோலோச்சும் உள்ளூர் தாதா ஒருவனுக்கு லண்டன் நிழலுலக தாதாவிடமிருந்து அழைப்பு வருகிறது. இந்த ஒற்றை வரிக் கதையோட்டத்தில் இனவெறி அரசியல், அகதிகளின் அவதி என வலுவான அம்சங்களைச் சேர்த்ததுதான் ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படம்.

தெற்கு ஆவணி மூல வீதியில் பரோட்டோ கடை வைத்திருக்கும் சுருளிக்கு, பணத்துக்காக அரிவாள் வீசுவது உபரி வேலை. ஒரு பெரிய இடத்து கொலையைத் தொடர்ந்து சில காலம் தலைமறைவாகும்படி சுருளியை நலம் விரும்பிகள் எச்சரிக்கிறார்கள். அந்த நேரம் பெரிய தொகையுடன் வெளிநாட்டு தாதாவின் அழைப்பு கதவைத் தட்ட, சுருளியின் லண்டன் அதகளம் அங்கே ஆரம்பமாகிறது.

லண்டனில் பீட்டர் தாதாவின் கையாளாய்ச் சேரும் சுருளி, எதிர் கோஷ்டியான சிவதாஸ் கும்பலின் திட்டங்களைக் கலைத்துப் போடுகிறான். உச்சமாய் சிவதாஸைக் கொல்லவும் திட்டமிடுகிறான். இலங்கைத் தமிழரான சிவதாஸுக்கு சக தமிழனான சுருளியை ஏனோ பிடித்துப்போக, தன்னுடன் சேர அழைப்பு விடுக்கிறான். வில்லாதி வில்லனான சுருளி, யாருடன் கூட்டு சேர்ந்து யாரை அழிக்கிறான் என்பதில் கதை அடுத்த தளத்துக்குப் பயணிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE