அடிதடி இல்லாத திருடன் - போலீஸ் விளையாட்டு

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com

ஹாலிவுட் திரையுலகில் திருடன் - போலீஸ் என்ற மையக் கருவை வைத்து பல்வேறு வகைமைகளின் அடிப்படையில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது ‘நெகோஷியேஷன் த்ரில்லர்’ (Negotiation Thriller) வகைமை. அதாவது ஒரு கொள்ளை நடக்கும் இடத்தில் பணயக் கைதிகளாக அப்பாவி மக்களை அடைத்து வைத்திருக்கும் கொள்ளையர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி எப்படித் தீர்வு காண்கிறார்கள் என்பதே இந்த வகைப் படங்களின் அடிநாதம். ஆக, பேச்சுவார்த்தைகளே இவ்வகையான திரைப்படங்களின் திரைக்கதைகளை நகர்த்திச் செல்லும். வசனங்கள் மூலமே காட்சிகளின் போக்கு நகர்வதால், இவ்வகைத் திரைக்கதைகள் மெதுவாக நகர்வதாகத் தோன்றக்கூடும். வெகுசில திரைப்படங்களில் மட்டுமே இவ்வகைத் திரைக்கதைகளைப் பரபரப்பு குறையாத வகையில் கையாண்டிருப்பார்கள்.

அவ்வகையில் உருவான திரைப்படம்தான் 2006-ல் ஸ்பைக் லீ இயக்கத்தில் வெளியான ‘இன்ஸைடு மேன்’ (Inside Man) திரைப்படம். டென்ஸல் வாஷிங்டன், க்ளைவ் ஓவன், ஜோடி ஃபாஸ்டர் ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம், பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஒரு டாலர்கூட பறிபோகாத கொள்ளை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE