ஓ.டி.டி. உலா: தனிமையில் பல்லாண்டுகள்

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

ஊரடங்கு, வீடடங்கு என பெருந்தொற்று காலம் மக்களைக் கடும் தனிமையில் ஆழ்த்திவருகிறது. ஊரடங்கின் அவசியம் இல்லாமலேயே தனிமையில் பீடிக்கப்பட்டவர்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள். அந்தத் தனிமையை எதிர்கொள்வதிலும் தனியாள் வேற்றுமைகள் உண்டு. இந்தத் தனித்துவ தனிமைகளின் பின்னணியில் 2 நெட்ஃப்ளிக்ஸ் திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்!

ஜன்னலில் கண்ணுறும் அபாயம்

வீட்டுக்குள் அடைந்திருக்கும் தனிமையைப் போக்க ஜன்னலில் வேடிக்கை பார்க்கத் தொடங்கும் ஒரு பெண்ணுக்கு, ஜன்னல் வழி அபாயம் ஒன்று தேடி வருகிறது. அந்தப் பெண் அப்படி கண்டதும், கொண்டதுமான அபாயங்கள் என்ன என்பதே ‘தி வுமன் இன் தி விண்டோ’ என்ற நெட்ஃப்ளிக்ஸ் திரைப்படம். திரையரங்கு திறப்புக்காக ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்து வேறு வழியின்றி ஓடிடி வாயிலாக ரசிகர்களை சந்தித்திருக்கும் இந்தத் திரைப்படம், இதே தலைப்பில் ஏ.ஜே.ஃபின் எழுதிய பிரபல த்ரில்லர் நாவலைத் தழுவி உருவானதாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE