சினிமா பிட்ஸ்

By காமதேனு

பிட்லீ
readers@kamadenu.in

அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் ‘ஃபேமலி மேன்’ தொடரின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மூலம் கடும் எதிர்ப்பலையைச் சந்தித்துள்ளார் சமந்தா. தமிழ் ஈழப் போராளி போல் சமந்தா சித்தரிக்கப்பட்டிருப்பதே எதிர்ப்புக்குக் காரணம். ட்ரைலருக்கே எதிர்ப்பு தெரிவிச்சா எப்படி, தொடர் முழுசா வந்ததும் பாருங்க புரியும் என்கிறது சமந்தா தரப்பு.

வெறும் தலைப்புக்கே எதிர்ப்புத் தெரிவிக்கிற வீரப்பரம்பரைய்யா நாங்க...

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ‘கிரே மேன்’ படத்தில் மேலும் ஒரு இந்திய முகமாக ஐஸ்வர்யா சோனார் இணைந்துள்ளார். மராட்டிய நடிகையான ஐஸ்வர்யா, ‘கிரே மேன்’ படத்திற்காக ஆறு மாத நடிப்புப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளாராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE