ஓ.டி.டி. உலா: அதிகாரத்தின் அநியாய வேட்டை

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

சமீபத்தில் வெளியான ஓடிடி திரைப்படங்களில் இந்திய அளவில் சிலாகிக்கப்படுகிறது, நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘நாயாட்டு’ மலையாளத் திரைப்படம். மேலெழுந்த வகையில் த்ரில்லராக ஈர்த்தாலும் தனிப்பட்ட எந்த வகைமையிலும் சிக்காது, இரண்டு மணி நேரத்துக்குப் பார்வையாளரை இருக்கையில் கட்டிப்போடுகிறது ‘நாயாட்டு’ (தமிழில் ‘வேட்டை’ எனலாம்).

காவல் துறை உதவி ஆய்வாளராக ஜோஜூ ஜார்ஜ், பெண் காவலராக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்கள். புதிதாகப் பணியில் சேரும் காவலராகக் குஞ்சக்கோ போபன். அந்தப் பிராந்தியத்தில் நெருங்கும் தேர்தலை முன்வைத்து, மூவரையும் நெருக்கடியில் முடிச்சிடும் சில சம்பவங்கள் நடக்கின்றன. அதன் உச்சமாய் இந்த மூவர் மீதும் குற்ற வழக்கொன்று பாய்கிறது. தேர்தல் நெருக்கத்தில் அதிகரிக்கும் அரசியல் அழுத்தத்துக்கு சக காவலர்களான மூவரையும் பலியாடுகளாக்கக் காவல் துறை மேலிடம் முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளும் உயரதிகாரிகளும் ஒருங்கிணையும் வேட்டையில் பிடிபடாதிருக்க மூவரும் தப்பித்து ஓடுகிறார்கள். அவர்களை அதிகார அரசியல் வெறிகொண்டு துரத்துவதும், அதைச் சாதித்துக்கொள்ள எம்மாதிரியான சமரசத்திலும் அவை அப்பட்டமாய் இறங்குவதுமே ‘நாயாட்டு’ திரைப்படத்தின் கதை.

தொடக்க அரை மணி நேரக் காட்சிகள், பிரதான கதாபாத்திரங்களின் பின்னணியை விளக்குவதிலே சற்று தளர்வாகச் செல்கின்றன. பின்னர் நிகழப்போகும் பெரும் அசம்பாவிதத்துக்கான அடித்தள ஏற்பாடுகளும் இந்தக் காட்சிகளில் இயல்பாகப் பொதிந்து கொள்கின்றன. ‘தடக்’கென அந்த அசம்பாவிதம் நிகழ்ந்த நொடியில் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமரவைத்து திரைப்படம் தனி வேகமெடுக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE