ரசிகா
readers@kamadenu.in
கவுரவத் தோற்றத்தில் வந்தால்கூட போதும்... அந்தப் படத்துக்கு ஆதரவு கொடுக்கத் தயாராகிவிடுவார்கள் தென்னிந்திய ரசிகர்கள் என்கிறார் ஒரு திரைக்கலைஞர். அவர் தான் 2005-ல் ‘சான் ஷா ரோஸன் செஹாரா’ இந்திப் படத்தில் அறிமுகமாகி கடந்த 17 ஆண்டுகளாக இன்னும் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் தமன்னா.
தமன்னாவின் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான இரண்டு படங்கள் ‘பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘ஆக்ஷன்’. தமன்னா தற்போது, ஓடிடியில் வெற்றிகரமாக கால் பதித்திருக்கிறார். ஏற்கெனவே ‘11th hour' என்கிற தெலுங்கு இணைய தொடரில் நடித்து முடித்துவிட்ட நிலையில், தற்போது அவர் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘நவம்பர் ஸ்டோரி’ நேரடி தமிழ் இணையத் தொடராக மே 20-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அதையொட்டி, காமதேனு மின்னிதழுக்காக மும்பையிலிருந்து தமன்னா அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
கடந்த வருடம் கோவிட் 19 தொற்றுக்கு ஆளானீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?