மகராசன் மோகன்
mohan.m@hindutamil.co.in
‘‘ஒரு கதையில் எனக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நான் ஒருபோதும் நினைப்பதில்லை. அந்தப் படத்தில் நம் கதாபாத்திரத்துக்கு ஒரு தனித்த அடையாளம் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்!’’ அழகு சொட்டப் பேசுகிறார் அம்ரிதா.
‘படைவீரன்’, ‘காளி’, ‘பிகில்’, ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படங்கள் வழியே தமிழில் தனக்கான இடத்தை நிறுவியவர், அடுத்தடுத்து ‘லிஃப்ட்’, தெலுங்கில் சில படங்கள் என கவனம் ஈர்த்து வருகிறார். தொடர்ந்து அவரோடு உரையாடியதிலிருந்து...
ஜீ.வி.பிரகாஷூடன் இணைந்து நடித்து சமீபத்தில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியான ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்கிற ஃபீலிங் இருந்ததா?