பகத்பாரதி
readers@kamadenu.in
“என்னுடைய கெரியர் மொத்தமா முடிஞ்சு போச்சுன்னு எல்லோரும் நினைச்சாங்க. அந்த நினைப்பை முறியடிச்சு சாதிச்சுக் காட்டியிருக்கேன்” வெற்றிப் புன்னகையுடன் பேசுகிறார், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாவம் கணேசன்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் ஹாசினி. அவரிடம் பேசியதிலிருந்து...
மீடியாவுக்குள் வந்தது எப்படி?
பாடகியாக ஆசைப்பட்டுதான் மீடியாவை தேர்ந்தெடுத்தேன். நிறைய கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்திச்சிருக்கேன். ஆனாலும், துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி செய்துட்டே இருந்தேன். கிட்டத்தட்ட 3,500 பேர் கலந்துகிட்ட ஆடிஷன்ல செலக்ட் ஆகி 2007-ல் ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே. ஆனேன். வெறும் ஆர்.ஜே. வேலையை மட்டும் செய்யாம புரொடக்ஷன் மேக்கிங் பற்றியும் கத்துக்கிட்டேன். பிறகு ரேடியோ சிட்டியில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன். பல பிரபலங்களை இன்டர்வியூ பண்ணியிருக்கேன். இப்படித்தான் என்னோட மீடியா பயணம் ஆரம்பிச்சது.