ரசிகா
readers@kamadenu.in
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி மாநிலங்கள் தமிழ் சினிமாவுக்கு அதிக கதாநாயகிகளை வழங்கி வந்துள்ளன. தற்போது ஜார்கண்ட் மாநிலமும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது.
‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘பார்டர்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் ஸ்டெஃபி படேல். ஜார்கண்டின் ஹசாரிபாக் நகரில் பிறந்து வளர்ந்த ஸ்டெஃபி, 2015-ல் ‘மிஸ் இண்டியா டீன் மாடல் இன்டர்நேஷனல்’ எனும் பட்டத்தை வென்றவர். ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தவர், காமதேனு மின்னிதழுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி இது:
உங்களை பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்துகொள்ளுங்கள்...