‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் வித்யுத் ஜம்வால் இப்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களைப் பூர்த்தி செய்ததைச் சிறப்பிக்கும் வகையிலேயே, ‘ஆக் ஷன் ஹீரோ ஃபிலிம்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதாகக் கூறியிருக்கிறார் அவர்.
கம்பீரமான வில்லன்...
சர்ச்சையில் சிக்குவதையே தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளார் கங்கனா. கரோனா இரண்டாவது அலையைப் பற்றி வருத்தத்துடன் இணையத்தில் பேசியவர்களை முட்டாள்கள், ‘இடியட்ஸ்’ என்றெல்லாம் இவர் வறுத்தெடுக்க, பதிலுக்கு கண்டனங்களும் குவிந்து கொண்டிருக்கின்றன. கங்கனா நடித்துள்ள ‘தலைவி’ படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகுமா ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமா என்ற பிரச்சினையே தீராத இத்தருணத்தில் அவரது இப்பேச்சு படக்குழுவுக்கு மேலும் சோதனையாக அமைந்துள்ளது.
முழுசா 'தலைவி'யாவே மாறிட்டாங்க போல...