பகத்பாரதி
readers@kamadenu.in
“டீச்சராகணும்கிறது என்னோட கனவு. நடிக்க வரலைன்னா கண்டிப்பா டீச்சராகியிருப்பேன்!” என உற்சாகமாக பேசத் தொடங்கினார் ரித்திகா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி' தொடரில் நடித்து வரும் ரித்திகா, ‘குக் வித் கோமாளி' யிலும் கலக்கியவர். அவரிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்...
சொந்த ஊர் கோயம்புத்தூர். படிச்சு முடிச்சதும் டீச்சராகணும்னு ஆசைப்பட்டேன். எதிர்பாராமல் மீடியாவில் வாய்ப்பு கிடைச்சுது. குடும்பமும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் இந்தத் துறைக்கே வந்துட்டேன்.