ரசிகா
readers@kamadenu.in
"முகத்தில் உணர்ச்சியைக் காட்டுவது என்றால் என்ன..?" - இப்படிக் கேள்வி கேட்கும் நடிகர்களும் கோலிவுட்டில் உண்டு. அவர்களிலிருந்து மாறுபட்டு, மொத்த முகத்தையும் நடிக்க வைப்பதில் கில்லாடியாக இருக்கிறார் மிர்னாளினி ரவி.
‘டிக் டாக்’ விடியோக்களின் வழியாக கோலிவுட்டில் நுழைந்து, முன்னணிக் கதாநாயகி ஆகியிருப்பவர் மிர்னாளினி. புதுச்சேரியில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்த தமிழ்ப் பெண். ‘டிக் டாக்’கில் மில்லியன்களில் இவரைப் பின் தொடர்ந்தவர்கள், இப்போது இன்ஸ்டாவிலும் தொடர்கிறார்கள்.
தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறு கதாபாத்திரம் வழியாக அறிமுகமாகி, சுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தில் முக்காடு அணிந்து முக பாவங்களால் கலக்கிய மிர்னாளினி, தற்போது, சியான் விக்ரம், ஆர்யா, விஷால் என தனது கோலிவுட் கிராஃபில் விறுவிறுவென மேலேறிக் கொண்டிருக்கிறார். சசிகுமார் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23-ல் வெளியாகிறது. அதன் ப்ரோமோவுக்காக சென்னை வந்திருந்தார். சமூக இடைவெளி கருதி அவருடன் தொலைபேசி வழியாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...