எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
சரியாக ஒரு வருடம் முன்னர், இந்த தேசமே சாலைகளில் நடையாய் நடந்து கொண்டிருந்தது. கரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் தடாலடியாய் அறிவிக்கப்பட, பிழைப்புக்காக நகரங்களில் தஞ்சமடைந்திருந்த தொழிலாளர்கள், சொந்த மண்ணைத் தேடி கால்நடையாகவும், சைக்கிள்களிலும் கிளம்பினார்கள். அப்படியானவர்களில் ஒரு சிலரின் பயண அனுபவத்தை அருகிலிருந்து பதிவுசெய்திருக்கிறது ‘1232 கிலோமீட்டர்ஸ்’ ஆவணப்படம்.
சுமார் 3 கோடி புலம்பெயர் தொழிலாளர் எதிர்கொண்ட துயரத்தின் ஓராண்டு நினைவாக, மார்ச் 24 அன்று ‘டிஸ்னி+ஹாட்ஸ்டார்’ தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது.
பயண வாதையும் தேவ தூதர்களும்