தேர்தல் ஜூரம் திரைத்துறையினரையும் தொற்றியிருக்கிறது. சில நடிகர் நடிகைகள், தங்கள் சமூக வலைதள பக்கத்தில் அரசியல் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை அக்ஷரா கவுடா, “விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்தான் இனிமேல் வருங்காலம். உங்கள் தலைவர்களை யோசித்துத் தேர்ந்தெடுங்கள்” என்று தேமுதிக-வுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த விஷயம் கேப்டனுக்குத் தெரியுமா?
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிக்கவுள்ள படத்துக்கு ‘விடுதலை’ என்று பெயரிட முடிவு செய்திருக்கிறார்கள். இதே தலைப்பில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் (1986-ல்) வெளிவந்துள்ளது. எனவே, தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டு, அத்திரைப்பட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்.
தலைப்பு பஞ்சம் தலைவிரித்தாடுதே?